Thursday, 29 December 2011

புதிய பேஸ்புக் வைரஸ்


இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல.
இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது. இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது. தற்போது இதுWin32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் பைலாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.

Tuesday, 27 December 2011

இணைய தளத்தில் ஆகாஷ் விற்பனை

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. மத்திய அமைச்சர் கபில் சிபல் இதனை வெளியிட்டு, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இவை வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வர்த்தக ரீதியாக இது பொதுமக்களுக்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
இணையதளத்தில் முன் கூட்டியே பதிந்து வைக்கலாம். உங்களுக்கு வீட்டில் வழங்கப்படுகையில் பணம் செலுத்தலாம். வாங்க விருப்பமுள்ளவர்கள் aakashtablet. com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லுங்கள். ரூ.2,500 என விலையிடப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் உள்ள Ubislate டேப்ளட் பிசி ரூ.2,999 என அதிக பட்ச விலையிடப்பட்டுள்ளது. இந்த Ubislate டேப்ளட் பிசி, ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்கும். ஆகாஷ் டேப்ளட் பிசி கீழ்க்காணும் அம்சங்களுடன் இருக்கும்.



7 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி இணைப்பு, யு.எஸ்.பி. வசதி, 366MHz+HD video வேக ப்ராசசர், 2 ஜிபி பிளாஷ் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, 256 எம்பி ராம் மெமரி, மூன்று மணி நேரம் வரையிலான இயக்கத்திற்கு மின்சக்தி வழங்கக் கூடிய 2100 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையாகும். 
இந்த தளம் சென்று தனி நபராக ஆர்டர் செய்கையில், நமக்குக் கிடைக்கும் பதில் அஞ்சலில், Ubislate டேப்ளட் பிசி க்கான ஆர்டர் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அநேகமாக ஆகாஷ் டேப்லட் பிசி தனி நபருக்கு இல்லாமல், கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Monday, 26 December 2011

உங்கள் இணையத்தளம் அல்லது வலைத்தளத்திற்கு லோகோ சுலபமாக வடிவமைக்க

நாளுக்கு நாள் புதிது புதிதாக இணையத்தளங்களும் ,வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன . எனவே மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் தளத்தினை வேறுபடுத்தி கொள்ள மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் இணையத்தளங்களிற்கு லோகோக்கள் உருவாக்கப்பட வேண்டும் .
அனால் அனைவராலும் கலைத்திறன் கொண்ட லோகோக்க்களை உருவாக்குவது என்பது கடினம் . எனவே உங்கள் தளத்திற்கு சிறந்த லோகோக்களை உருவாக்க LOGOTYPEMAKER என்ற தளம் உதவுகிறது .

இந்த தளத்தின் உதவியுடன் உங்கள் இணையத்தளங்களுக்கு மட்டுமல்ல வணிக நிறுவனங்களுக்கும் லோகோக்களை வடிவமைக்க உதவும் . 



இந்த தளத்திற்கு சென்று உங்கள் தளத்தின் பெயர் அல்லது வணிக நிறுவனத்தின் பெயர் உள்ளீடு செய்துGENERATE LOGO என்பதை கிளிக் செய்யுங்கள். 
இப்போது உங்களுக்கு சில லோகோக்கள் தரப்படும் இவை பிடிக்கவில்லை என்றால் REFRESH என்பதை கிளிக் செய்வதன் மூலம் மேலும் பல லோகோ வடிவமைப்புகளை பெறலாம் . இவற்றில் இருந்து உங்களுக்கு பிடித்த லோகோவினை தெரிவு செய்து SAVE பட்டனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . 


லோகோவின் சின்னத்தை மாற்றவும் , நிறத்தை மாற்ற , எழுத்தின் வடிவத்தைமற்ற விரும்பினால் கீழே படத்தில் காட்டியவாறு கியர் சின்னத்தில் கிளிக் செய்து மாற்ற முடியும் . 





மேலே படத்தில் கட்டிய பட்டனை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் தோன்றும் 
இந்த பக்கத்திலே எழுத்தின் வடிவத்தை நிறத்தை மாற்றியமைத்து பின்னர் SAVE   பட்டனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . 










தள முகவரி http://logotypemaker.com